பொன்னமராவதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்!!


பொன்னமராவதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி அவர்கள் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அரசு சாதனைகளை எடுத்துரைப்பது, கூட்டணியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து செயல்வீரர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.


இதில் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி, மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்தல் பணிகளில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற உறுதியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!