ஆற்காடு அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ஆற்காடு கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆற்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் சித்திரை மாத அமாவாசை விழாவையொட்டி நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு உற்சவ அம்மனுக்கு பலவகை பூக்களைக் கொண்டு அங்காளம்மன்
அலங்காரம் செய்யப்பட்டு,கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தார் அதன் பின்னர் இரவு 11 மணியளவில் உற்சவ அங்காளம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து பூசாரி வேலாயுதம் பக்தி பாடல்களை பாடினர். அப்போது அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைக் கண்ட பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, ஓம் சக்தி அங்காளம்மா. ஓம் சக்தி அங்காளம்மா என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் தாலாட்டு பாடல் பாடி அம்மனுக்கு அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. அதன்பின்பு அம்மன் உட்பிரகாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சித்திரை மாத அமாவாசை என்பதால் திரளான பக்தர்கள் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பக்தர்கள் மற்றும் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது. அமாவாசை ஊஞ்சல்விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் சாமியார் AVM வேலாயுதம் மற்றும் கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக