வேள்பாரியின் தந்தை பனையனின் வாளும் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் எண்ணெய் கிராமத்தில் அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் கா. காளிதாஸ் , பேராசிரியர்க. மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் களாய்வு மேற்கொண்டனர். அப்போது, கோனாட்டுஅம்மன் கோவிலில், பறம்புமலை வேள்பாரியின் தந்தை பனையன் கல்வெட்டும் அவனது வாளும் வழிபாட்டு நிலையில் இருப்பதைக்கண்டறிந்துள்ளனர். இது பற்றி ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது, சங்க காலத்துக் கோனாடு இவ்வூராகும். இங்குள்ள கோனாட்டம்மன் கோவில் முன்பாகக் கிடக்கும் கல்செக்கில், "ஸ்ரீ பனையன் சானின் ஈசர்க்கு ம(ா) ரன் இட்ட செக்குறல்" என்ற கல்வெட்டுத் தொடர் காணப்படுகின்றது. இங்குள்ள கோனாட்டம்மன் கோயிலுக்கு மேற்புறம் " பட்டவன் பனையன்" என்று இவ்வூர் மக்களால் அழைக்கப்பட்டு வணங்கி வரும் தெய்வம் உள்ளது. மேடையில் பனையனது வீரவாளும் வைத்து வணங்கப்படுகிறது. இக் கோயிலின் எதிரே கிடக்கும் கல்செக்கில் பனையனது பெயரும் மாறனாகிய பாண்டியன் செக்குரல்கொடுத்த செய்தியும் எழுதப்பட்டுள்ளது . உறத்தூர்க் கூற்றம் ஐயர்மலை மூன்றாவது குகைத்தளப் பகுதி சமணப் படுக்கையில் பனையன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. " பனை துறை
வேஸன் அதிட் அனம்" என்பது அக்கல்வெட்டுச் செய்தி. மிழலைக் கூற்றத்துக் கோனாட்டில் பனையனும், மிழலைக் கூற்றத்துப் பறம்பு நாட்டில் பாரியும்(கி.பி - 2) சிறப்பாக ஆண்டு வந்துள்ளனர். என்பது பெறப்படும்.பாபாரியின்ரியின் இறப்பிற்குப் பிறகு,திருக்கோவிலூர் அருகே சோழ பாண்டியபுரம் ஊரில் ஆண்டி மலைப் பாறையில் (கிபி 953)" பாரி மகளிரின் பைந்தொடி முன் கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்த வடவன்" என்ற குறிப்பு உள்ளது. சித்த வடவன் மகளின் பெயர் வானவன்மாதேவி(பாரியின் பெயர்த்தி). இவள் சுந்தர சோழனின் மனைவியும் இராஜராஜனின் தாயும் ஆவாள். பனையன் ஆட்சியில் எண்ணெய் ஆலை அதிகமாக இவ் ஊரில் இருந்திருக்க வேண்டும். இவ் ஊரில் எண்ணெய் ஆட்டும் கல்லுரல்கள் ஏராளம் காணப்படுகின்றன. இதனால் இவ்வூருக்கு "எண்ணெய்" என்று பெயர் வந்திருக்கலாம். இதுபோன்ற தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களையும் இடங்களையும் பாதுகாப்பது நமக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள கடமை என்றார்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்




கருத்துகள்
கருத்துரையிடுக