ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு என்னும் மையத்தில் தயார் படுத்தி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஜெ. யு சந்திரகலா!!


இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் ஆகியோர்  தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026  வாக்கு எண்ணும் மையத்தில்  தயார் படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.சுனில்குமார் சிங் இ.ஆ.ப., மரு.பிரீத்தி கோயல் இ.ஆ.ப., காவல் பார்வையாளர் திரு.நிலாப்ஜா சௌத்ரி இ.கா.ப., ஆகியோர் இன்று (21.4.2026) வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டு வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வினில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகள் வாரியாக பாதுகாப்பு அறையில் வைக்க செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பாதுகாப்பு அறைக்கு வெளியே தீ தடுப்பாண்களை பொருத்துவதற்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில்   வேட்பாளர்களின் முகவர்கள் அமருமிடம், வாக்கு எண்ணும்  பணியாளர்கள் அமருமிடம், தடுப்பு கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதையும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையம் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படுவதை கேட்டறிந்தார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி என அனைத்து இடங்களிலும் மொத்தம் 154 சிசிடிவி கேமராக்கள் கொண்டு மையம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டார்கள்.  தொடர்ந்து, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மின்னணு வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை 24 மணி நேரமும் வீடியோ பதிவு செய்வதை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின் பொழுது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சிபின் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜி, ஏகாம்பரம், நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூமா, செயற்பொறியாளர் திருமதி.திரிபுரசுந்தரி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!