மதுரை வீரன் கோவிலில் மண்டல பூஜை விழா ஸ்டார் குருசாமி கலந்து கொண்டார்!!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன் குளம் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன் திருக்கோவிலில் 48ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. (11.04.2026) நடைபெற்ற இந்த விழாவில், காலை முதலே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு ஸ்டார் குரு சேரிட்டபுள் பவுண்டேசன் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஸ்டார் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனர் திருமிகு டி. குருசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில், மதுரைவீரன் திருக்கோவில் பக்தர்களின் நம்பிக்கைக்கு மையமாக இருந்து வருவதாகவும், இத்தகைய ஆன்மீக நிகழ்ச்சிகள் சமூக ஒற்றுமையை வளர்க்கும் என்றும் தெரிவித்தார்.விழாவை முன்னிட்டு, வடச்சமை சீமானூர் வகையறாக்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட சேவைகளும் செய்யப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் கே. ராஜா, பி. ராஜன், பூ. கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக