ராணிப்பேட்டை மாவட்ட சமரச தீவு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
2026 ஆம் ஆண்டிற்கான சமரச நாள் 09.04.2026 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு மாநில சமரசம் மையம் சென்னை ஆகியவற்றால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில் வியாழக்கிழமை காலை ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சமரச நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சமரச நாளின் முக்கியத்துவத்தை குறித்தும் நிலுவையில் உள்ள வழக்குகளை இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து சமரசர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் பயன்பெறும் வகையில் தீர்வை எட்டுவதற்கான அவசியம் குறித்தும் இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்திலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, வாலாஜாபேட்டை ,சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் செயல்பட்டு வரும் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான சமரச மையங்கள் குறித்தும் அவற்றை வழக்காடிகள் பயன்படுத்திக் கொண்டு பலன் அடைய வேண்டும் என்றும் உரையாற்றினார்.
ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும். ராணிப்பேட்டை மாவட்ட சமரச மையத் தலைவருமான M . செல்வம் அவர்கள் சமரச விழிப்புணர்வு துண்டு அறிக்கைகளை பொது மக்களுக்கும் வழக்காடிகளுக்கும் வழங்கினார். சமரச நாள் விழாவில். ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் நீதிபதி A. பாலகிருஷ்ணன் தலைமை குற்றவியல் நடுவர் A. தாவூத் அம்மாள் மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் செயலாளருமான S. முனுசாமி. மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் S. பூர்ணிமா மாவட்ட சமரச மைய சமரசர்கள் ராணிப்பேட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சமரச நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒரு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் சமரசம் குறித்த விழிப்புணர்வு பரப்புரை ராணிப்பேட்டை நகரில் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது . இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்ட சமரச மையங்களின் மூலம் ஆற்காடு வாலாஜாபேட்டை சோளிங்கர் மற்றும் அரக்கோணம் நீதிமன்றங்களிலும் சமரச நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக