புதுக்கோட்டை அருகே முள்ளங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் நடைபெற்ற சித்திரை திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதழுடன் தொடங்கி பத்துநாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் வீதிவுலாம் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் வைரத் தேரோட்டமும், பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி, பறவைக் காவடி,  பால்குடம், தீ மிதித்தல், அழகு குத்துதல், குந்தைகளுக்கு தொட்டில் கட்டுதல், மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக் கடனை சுவாமி க்கு செலுத்தினர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை அர்ச்சனை மாவிளக்கு போன்ற நேர்த்திக் கடன்களை செழுத்தி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர். அதேபோல சூரக்காடு செட்டிவிடுதி முள்ளங்குறிச்சி சாந்தம்பட்டி கிராமத்தார்கள் மூன்று இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கறம்பக்குடி பகுதியில் முள்ளங்குறிச்சி ஸ்ரீ  முத்துமாரியம்மன் கோயில் பிரசித்திபெற்றகோவிலாகும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது முத்துமாரி யம்மன் அருள்பெற்றுச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!