தேசிய அளவில் பெங்களூருவில் ரமடா கன்வென்சன் சென்டரில் நடைபெற்ற பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு!!


தேசிய அளவில் பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு பெங்களூருவில் ரமடா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் 2036 ல் கல்வி, ஓவியங்கள் வழியாக கல்வி, செயற்கை நுண்ணறிவு வழியாக கல்வி, குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் உளவியல், நூலக மேம்பாடு  போன்ற பல தலைப்புகளில் பல்துறை வல்லுனர்கள் உரை நிகழ்த்தினர். கருத்தரங்க நிகழ்வில் பள்ளிகளுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு “ நவீனத் தொழில்நுட்பத்தில் மிக மேம்பட்ட பள்ளி” க்கான விருது வழங்கப்பட்டது. விருதினை கர்நாடகா மாநிலக் கல்விக்குழுத் தலைவர் பேராசிரியர் உர்மு சக்கரவர்த்தி, தேசியப் பள்ளிகள் அமைப்பின் தலைவர் ஷீகா தில்லான் வழங்க  பள்ளி முதல்வர், தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் போர்டு, தொலைக்காட்சி வசதிகளும், ரோபோட்டிக்ஸ் லேப், கணிதம் மற்றும் ஆங்கில ஆய்வக வசதிகளும் நிறைந்த பள்ளியாக ஶ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி இயங்குகிறது என்றும், அனைத்துப் பாடங்களும்  செயற்கை நுண்ணறிவு வழியாக கற்பிக்கப்பட்டு  கற்றலை இலகுவாக்குகிறது ஶ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி என்றும்  சான்றளிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. தொழில்நுட்பத்தில் சிறந்துவிளங்க காரணமான ஆசிரியர்களுக்கு இந்த விருதினைச் சமர்பிப்பதாக மேடையில் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி தெரிவித்தார்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!