அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ‘கட்டாய வசூல்’ குற்றச்சாட்டு!விவசாயிகள் வேதனை – மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பெண்ணாடம் அடுத்த அருகேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகம் சார்பில் செயல்படும் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், பணம் வழங்காமல் நெல் மூட்டைகளை ஏற்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அரசு நிர்ணயித்த ஆதரவு விலைக்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கடும் மனவேதனை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே உற்பத்தி செலவு அதிகரிப்பு, விலை நிலை குறைவு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய கட்டாய வசூல் விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் சட்டவிரோதமாக பணம் வசூல் செய்யப்படுவது குறித்து உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு சேவையில் ‘கட்டாய வசூல்’ நடப்பதா?

விவசாயிகளின் வேதனைக்கு அதிகாரிகள் தீர்வு காண்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!