திருமயத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர் கூட்டம்!!


திருமயத்தில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில்  அதிமுக வேட்பாளர் வைரமுத்து பேசிய கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது காவிரி குடிநீர் திட்டம் அரசு பணிமனை போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். நான் கொண்டு வந்த அரசு பணி மனை திட்டத்தை திமுக ஆட்சி வந்த உடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் பணிமனை நிறைவு பெறும் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். இந்த பகுதிக்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தொழில்பேட்டை அமைக்கப்படும். காகித தொழிற்சாலை அமைக்கப்படும் விவசாயிகளும் வியாபாரிகளும் பயனடையும் வகையில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும். திருமயம் மலைக்கோட்டை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். மேலும் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து தேர்தல் வாக்குறுதி அனைத்து மக்களுக்கு வீடு தேடி வரும். இந்த தொகுதியில் ஒரு கனிமவளத்துறை அமைச்சர் இருக்கிறார் கம்மாய் மற்றும் குவாரிகளை சுரண்டி விற்று வருமானத்தை பார்த்து வருகிறார். நான் முதல் முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பின்னர் இரண்டு முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன் இருந்தாலும் மக்களை விட்டு நான் எங்கும் செல்லவில்லை இன்று வரை மக்களோடு மக்களாக தான் இருக்கிறேன். திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது பணத்தை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது. நடைபெற உள்ள தேர்தலில் நமது கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அதிமுக செயல் வீரர்களும் நீங்கள் தான் வேட்பாளர் என மனதில் நினைத்து  பணியாற்ற வேண்டும். அப்போதுதான் பெருவாரியான வாக்குறுதி வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் நமது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனவுடன் மக்களுக்கான  திட்டங்களை திருமயம் தொகுதிக்கு மக்களுக்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அவர் பேசினார் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் அதிமுக மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!