புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் எஸ் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!!


திருமயம் தொகுதிதிமுக வேட்பாளர்  அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் அம்மன்குறிச்சி, வார்ப்பட்டு, பனையபட்டி தூத்தூர், ஆலவயல்,  கள்ளம்பட்டி, கண்டியாநத்தம், உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் குறிப்பிட்டதாவது திமுக திராவிட மாடல்அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கிறது. இந்தியாவிலேயே துணிச்சல் மிக்க முதலமைச்சர் என்ற பெயரை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலில்பெற்று இருக்கிறார். இத்தகைய சிறப்புடைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .பெண்களுக்கு கட்டணம் இல்லாத விடியல் பஸ்வசதி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 8000 மதிப்பில் கூப்பன் வழங்கப்படும். என்றார். பிரசாரத்தின் போது டாக்டர் அண்ணாமலை ரகுபதி, மாவட்ட அவைத்தலைவர் அருவீரமணி, மாமன்ற உறுப்பினர் கனகம்மன் பாபு, ஆலவயலை ச்சேர்ந்த அழகப்பன் அம்பலம் ,ஒன்றிய செயலாளர் அடைக்கல மணி, பொன்னமராவதி நகர செயலாளர் அழகப்பன், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க, தமிழர் தேசம் தேமுதிக உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். வேட்பாளர் சென்ற இடமெல்லாம் வாக்காளர்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!