இராமேஸ்வரம்: அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள ஒரு கடையில் பூஞ்சை பூத்து வெள்ளை நிறத்தில் இருந்த எலுமிச்சை சாதம்!!
இராமேஸ்வரம்: அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த எலுமிச்சை சாதம் பொட்டலங்களை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வாங்கியுள்ளனர்.அந்த உணவு பொட்டலங்களை பிரித்துப் பார்த்தபோது அதில் பூஞ்சை பூத்து வெள்ளை நிறத்தில் படர்ந்து எலுமிச்சை சாதம் கெட்டுப் போயிருந்துள்ளது.இது குறித்து அந்த கடைக்காரரிடம் கேட்கும் பொழுது அங்கு இருந்த பெண் மற்ற பொட்டலங்களை பிரித்துக் காட்டி இவையெல்லாம் நன்றாகத்தான் உள்ளது ஒரு சில பொட்டலங்கள் அப்படி இருப்பதற்கு நான் என்ன செய்வது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதை வீடியோ பதிவு செய்து இதுபோன்று ராமேஸ்வரம் கடற்கரையில் உள்ள சிலக் கடைகளில் உணவு தரமற்றதாக உள்ளது என்று கூறி உணவு பாதுகாப்புத் துறையினர் இங்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக