கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி தலைமையில் மத்திய அரசை கண்டித்து தொகுதி மறு வரை நகலை எரித்து, கருப்புக் கொடி ஏந்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது, இப்போது தொகுதி மறுவரையறை என தொடர்ந்து நமது மாநிலத்திற்கும் நமது மக்களுக்கும் துரோகமிழைக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு கைகட்டி வாய் மூடி தலையாட்டும் அடிமை பொம்மை அதிமுக மற்றும் அதன் கூட்டணியையும் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கரூர் கலைஞர் அறிவாலயம் முன்பு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக கழக செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்தில், கழகம் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்..
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக