புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான நடைபயிற்சி பகுதியில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு!!


புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் வழியாக பயிற்சி மேற்கொண்ட நபர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை வேட்பாளர் என். ராமச்சந்திரன்  தொண்டர்களுடன் சென்று நடை பாதையில் பயிற்சி மேற்கொண்ட வாக்காளர் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் வாக்கு சேகரித்தார் .நான் வெற்றிபெற வாக்களியுங்கள். வெற்றி  பெற்றவுடன் நடைபயற்சி பாதையில் தேவையான அளவு மண் பரப்பி மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். நடைபாதையில் பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களும் விளையாட்டு வீரர்களும் பெரிது மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!