மதுரை மீனாட்சியம்மன், சொக்கர் தேருக்கு புதிய சக்கரம்!!
மதுரை : உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மதுரையில் வருகிற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாள் நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வு திருத்தேரோட்டம் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சிறிய தேர் பெரிய தேர் இரண்டிலும் பழைய இரும்பு சக்கரங்களை அகற்றிவிட்டு 7 டன் எடை கொண்ட புதிய இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த சக்கரங்கள் பெல் நிறுவனத்தினர் தயாரித்து உள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக