மதுரை : பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலமாரட் வீதியில் நான்கு முனை சந்திக்கும் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது!!
மதுரை : பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலமாரட் வீதியில் நான்கு முனை சந்திக்கும் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயங்கள் ஏற்படுகிறது.தற்போது மதுரையில் உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா நடைபெற்று கொண்டு வருகிறது. பக்தர்கள் பெரும்பாலான கூட்ட நெரிசலில் நடந்து வருவதாலும், வாகனங்களில் வருவதால் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள். முக்கிய சாலையில் நடுரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக