கோடையின் வரம் பனைமரம்!!
"பூலோக கற்பகத்தரு "என சிறப்பு பெயர் பெற்ற பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழ்கிறது அதன் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன்படுகிறது நுங்கு பனங்கற்கண்டு கருப்பட்டி பதநீர் பனங்கிழங்கு என உணவுப் பொருட்களை வாரி வழங்குகிறது அது மட்டுமன்றி அதன் பாகங்கள் வீடுகட்ட உத்திரமாக பயன்படுகிறது பனை ஓலை கூரை வேய பயன்படுகிறது பனை நார் கொண்டு கூடை பெட்டி அழகு பொருட்கள் விசிறி பாய் போன்றவை தயாரிக்கப்படுகிறது பனைமரம் பராமரிப்பு தேவை இல்லாத மரமாகும் மழையை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில் பனைமரம் தானாக வளர்ந்து நல்ல பலனை தருகிறது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் , மண்ணரிப்பை தடுக்கவும் இந்த மரம் உதவுகிறது சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய பனை மரத்தின் இலைகள் விசிறி போல இருக்கும் பூக்கள் சிறியதாக இருக்கும் பனை மரத்தின் நுங்கு உள்ளே இருக்கும் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வர கோடைகாலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும் தோலுடன் நுங்கை உண்பதால் சீதபேதி குணமாகும் பனங்கற்கண்டையை எடுத்து க் கொண்டால் அம்மை நோய் தாக்கம் குறையும். இருமலுக்கும் சிறந்த மருந்து ஆகும் பனங்கிழங்கு நார்ச்சத்து மிகுந்தது பனம்பிஞ்சை லேசாக கீறி மண்பானை கட்டி அதில் வடியும் பாலை சேகரித்து சுண்ணாம்பு சேர்த்து பதநீர் தயாரிப்பர். உடலுக்கு மிக உகந்த பானமாகும் கோடையில் மூன்று மாதங்களுக்கு இவ்வாறு பதநீர் எடுப்பர் எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மிக உதவிகரமாக இம்மரம் உள்ளது மேகநோய் இருப்பவர்கள் 40 நாட்கள் தொடர்ந்து பதநீர் அருந்தினால் இந்த நோய் கட்டுப்படும்
கூந்தல் பனை:
60 முதல் 70 வருடங்கள் பழமையான பனை மரத்தின் மேல் பகுதியில் திடீரென சப்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு பூக்களும் காய்களும் வெளிவரும் கொத்துக் கொத்தாக காணப்படும் இப்படிப்பட்ட மரங்களை கூந்தல் பனை என்று அழைப்பர்
பனை மரத்தின் வேர்கள் சல்லி வேர்களாக இருப்பதால் மண்ணரிப்பை தடுக்கும் இதை அறிந்த நம் முன்னோர்கள் வயல் வரப்புகளில் நீ மரங்களை வளர்த்தார்கள். பனை ஓலை ஓலைச்சுவடிகள் இலக்கியங்கள் படைக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது தமிழனின்
வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த இப்பனை மரம் உச்சி முதல் வேர் வரை பயன்படுகிறது அதனால் தான் மாநில மரமாக தேர்வு செய்யப்பட்டது பனைமரம் பாதுகாக்க பட வேண்டும்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக