திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர். ரகுபதியை ஆதரித்து நச்சாந்துபட்டியில் நடைபெற்ற பிரசார கூட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம், மாநில. அரசின் உரிமைகளை பாதுகாக்க   மக்கள் இந்த தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை  வெற்றி பெறச்செய்ய வேண்டும் என இந்திய கம்யூ. கட்சியின்  மத்தியகுழு உறுப்பினர். முத்தரசன்  கூறினார்.திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர். ரகுபதியை ஆதரித்து நச்சாந்துபட்டியில் பிரசார கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலர். செங்கோடன் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலர். கணேசன்,முன்னாள் ஒன்றிய செயலர்.ராம.கருப்பையா,வட்டார காங்.தலைவர் . முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக  வடக்கு ஒன்றிய பொருளாளர். வேங்கையரசன் வரவேற்றார்.  கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது. .. அம்பேத்கர் கொண்டு  வந்த இந்திய அரசியல் சட்டத்தை சர்வாதிகார போக்கு கொண்ட பாஜக சிதைத்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை நசுக்குகிறது. இப்போது நடக்கும் தேர்தல் தமிழகத்திற்கும் டெல்லிக்குமானது.  திமுக அதிமுக விற்கு இடையே போட்டி இருந்தாலும்  அதிமுகவை வைத்து பாஜக தமிழகத்தை ஆள நினைக்கிறது.  அது தெரியாமல் அதிமுக பொதுச்செயலாளர்  டெல்லியில்  கட்சியை அடமானம் வைத்து விட்டார். யாரும் எந்த மதத்திலும் இருக்கலாம். அது அவர்களது உரிமை.விருப்பமாகும். பாஜக விற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் திட்டத்தின் பெயரையே மத்திய அரசு மாற்றி சட்ட மாக்கிவிட்டது.  கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர். ஸ்டாலின் கொண்டுவந்த மகளிர் விடியல் பயணம்,மகளிர் உதவித்தொகை,பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம்  போன்றவை ஏழை,எளிய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.   அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ8: ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் தருவதாக சொல்லியிருக்கிறார்.அதில் உங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இப்படி ஏராளமான வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல்.அறிக்கையில் இடம் பெற்றுள்ளன  .   திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் 11 சதவீதம் பொருளாதார வளர்ச்சி  ஏற்பட்டுள்ளது என்றார். இறுதியில் திருமயம் ஒன்றிய இ.கம்.யூ. செயலர். சின்னாண்டி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!