மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்ஸ்ரீ லட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மன் பவுர்ணமி திருவிளக்கு பூஜை!!


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கும் சிவ பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு ஸ்ரீ லட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இரவு 7 மணியளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கு பூஜையில் ஈடுபட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!