நவீன மூட்டைப்பூச்சி நசுக்கும் இயந்திரம் போல கொசுவினை தடுக்க நவீன வழிமுறையை கூறிய குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரால் சிரிப்பொலி!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக பாலு என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்றைய தினம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெப்படை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது பொதுமக்கள் கொசு மற்றும் ஈ தொல்லைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய வேட்பாளர் பாலு, கொசு பாட்டினை கொண்டு கொசுவை அடித்து விட்டு படுத்து கொள்ளுங்கள் எனவும் அவ்வாறு செய்யவில்லை எனில் கொசு உங்களை தூக்கிக் கொண்டு சென்று விடும் எனவும் கூறினார் தொடர்ந்து பேசிய அவர் எங்கள் வீட்டிலும் இதே பிரச்சினை உள்ளது எனவும் கொசு மற்றும் ஈ தொல்லைகளை தீர்க்கவே முடியவில்லை எனவும் கூறியதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. இந்நிலையில் இவரது இந்த பேச்சினை கேட்ட பொதுமக்கள், மூட்டை பூச்சியினை நசுக்கும் நவீன இயந்திரம் என்ற திரைப்பட நகைச்சுவை காட்சி போன்று கொசு பேட் வைத்து கொசுவை அடியுங்கள் என்று கூறுகிறார் என பேசி சென்றனர்.
தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக