சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜா தேவருக்கு மக்கள் அலை – தன்னெழுச்சி ஆதரவு!!

சாத்தூர் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர். இசக்கி ராஜா தேவர், தொகுதி முழுவதும் மக்கள் பிரச்சனைகளில் நேரடியாக ஈடுபட்டு செயல்பட்டு வருகிறார். பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் அவரது அணுகுமுறை, அவரை மக்கள் மத்தியில் முன்னணி வேட்பாளராக உயர்த்தியுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்துக்கு பின், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தேவையான உதவிகளையும் விரைவாக ஏற்பாடு செய்தார். அதேபோல் குடிநீர் பிரச்சனை நீண்டநாள் நிலவிய ஒரு கிராமத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகளுடன் பேசி உடனடியாக தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்தது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் காரணமாக, இசக்கி ராஜா தேவருக்கு தொகுதி முழுவதும் தன்னெழுச்சியான மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் திரண்டு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.

இதன் விளைவாக, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சாத்தூர் தொகுதியில் தேர்தல் கள நிலை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!