குடியாத்தம் அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த செம்பேடு  பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (53),

 ஆட்டோ டிரைவர்.

 அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ், கிரிபிரசாத் (29)  ஆட்டோ டிரைவர்கள்.

 வெங்கடேசனுக்கும் சதீசுக் கும் இடையே ஆட்டோகளை காலி இடத்தில் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்தது.

இந்நிலையில் நேற்று  சதீஷின் தம்பி கிரிபிரசாத், வெங்கடேசனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

மேலும் கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி உள்ளார். 

இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ரத்தவெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ்  வழக்குப்பதிவு செய்து கிரிபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!