தேனி-கம்பம் பகுதியில் திடீரென பேருந்துகள் சிறைபிடிப்பு !!

தேனிமாவட்டம், கம்பம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!