அம்பேத்கர் பிறந்தநாள் விழா: தீபா தலைமையில் வீர வணக்கம் – சமூக நீதிக்கான உறுதி மீண்டும் முழங்கியது!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பொன்னேரியில், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மக்கள் போராளி மாவீரன் கருப்புசாமி அவர்களின் துணைவியார் தீபா கருப்புசாமி தலைமையில், அம்பேத்கர் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கமும் புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக