நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா சக்தி கரகம், அக்னி கரகம் அழைத்தல் நடைபெற்றது!!


கோவை நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரை மாதத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 21ம் தேதி பண்டிகை சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 28ம் தேதி அப்புலுபாளையம் அருள்மிகு நாகாளம்மன் கோயிலில் இருந்து மாகாளியம்மனுக்கு நகை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோடு அருள்மிகு வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல், மாவிளக்கு பூஜைகள் மற்றும் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், குணசேகரன், தாமோதரசாமி, பாலாஜி, கேசவன், ராஜகோபால், வீரபத்திரன், கவுன்சிலர் சித்ரா மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!