பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டடார்!!


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியப் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் எஸ்.ரகுபதி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. பொன்னமராவதி ஒன்றியப்பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் திமுக அரசின் சாதனைகளை விளக்கியும், திருமயம் தொகுதியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூறியும், தளபதியின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் திமுக தேர்தல் பணிக்குழு, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக,திராவிடர் கழகம்,இந்திய முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ,தேமுதிக, மக்கள் நீதி மய்யம்,தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!