ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள வார்டுகளில் அமைச்சர் ஆர் காந்தி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்!!


ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஆர் .காந்தி ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள வார்டுகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பட்டாசு வெடித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் வீரவால் பரிசாக வழங்கியும் வரவேற்றனர்.பின்னர் அமைச்சர் ஆர் காந்தி பேசியதாவது : -நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நான் ஏழாவது முறையாக போட்டியிடுகிறேன் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்று  5 வருடம் ஆனது தேர்தலுக்கு முன்னர் சொன்ன வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்பு தான் தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளான மகளிர் காண விடியல் பயன திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டார். அதே போன்று தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000 தருவதாக சொன்னார் அதன்படி தமிழகம் முழுவதும்1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குகின்றார். தற்போது நடக்கின்ற தேர்தல் அறிக்கையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையாக ரூ .2000 வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை ரூ .2000 வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் இவ்வாறு அவர் பேசினார்.அப்போது நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் , துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா , நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன் அப்துல்லா வினோத் குமார் கோபி கிருஷ்ணன் ஜீவ மணி ஜெய சங்கீதா அசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!