குடியாத்தம் அருகே மின்கம்பம் . உடைந்து மூதாட்டி பலி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கல்லப்பாடி மதுரா சாலையோரப்பட்டி கிராமத்தில் இன்று 27-04-2026 மாலை 04.30 மணியளவில் TN 88 Y 2299 என்ற வாகன எண் கொண்ட  கனரக வாகனம் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி கிரானைட் கல் ஏற்றி  வந்த போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில்  மோதியதில்    மேற்படி கிராமத்தை சேர்ந்த. தங்கம்மா(வயது 75) க.பெ.லேட்.ராசப்ப கவுண்டர் என்பவரின் மீது மின் கம்பம் மற்றும் மின் கம்பிகள் விழுந்ததில்  சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது விசாரணையில் தெரிகிறது. மேற்படி விபத்து தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இறந்த நபரின் பிரேதமானது  உடற்கூறு ஆய்வு செய்யும் பொருட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!