மதுரை : அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற 87-ம் ஆண்டு உற்சவ விழா!!
மதுரை:மதிச்சியம் வைகை வடகரை பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் 87- ம் ஆண்டு உற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உற்சவ விழாவில் காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டது. காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
மேலும் இந்த உற்சவ விழாவில் அப்பகுதியில் உள்ள பெண்கள் திருவிழாக்கு பூஜைகள் செய்து காளியம்மனை வழிபட்டார்கள் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முளைப்பாரி பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக