ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைபெற்ற 63வது பொங்கல் திருவிழா!!


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் மிகவும் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் 63 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது  பொங்கல் திருவிழாவின் முதல் நாளை முன்னிட்டு திருமஞ்சனம் குடம் அழைத்து வரப்பட்டு ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக ராமர் லட்சுமணன் வேடமணிந்து பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது பால்குடம் எடுத்தல் அக்னி சட்டி எடுத்தால் காவடி எடுத்தால் போன்ற பக்தர்களின் நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிந்து ராஜா அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன துளசி மாலை வடைமாலை மற்றும் வீர ஆஞ்சநேயருக்கு தேவையான மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன 

தொடர்ந்து காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக இந்த திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த திருவிழாவில் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் ஜக்கம்பட்டி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வீர ஆஞ்சநேயரின் அருள் பெற்று சென்றனர். 

தேனி மாவட்ட புகைப்பட கலைஞர் ராஜா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!