மூட்டைக்கு ரூ.60 வசூல் – அதிகாரிகள் கொள்ளையில் சிக்கிய விவசாயிகள்!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் மஞ்சமுத்தான் கோயிலில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கடும் அவதியுறுகின்றனர். தினமும் நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து, ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை அதிகாரிகள் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நெல் எடை போடும் பணியில் கடும் தாமதம் ஏற்பட்டு, 20 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதிகாரிகள் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே வருவதாகவும் கூறப்படுகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பான சேமிப்பு இல்லாததால், நெல் மழையில் நனைந்து முளைக்கும் நிலையும் உருவாகி, விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மூட்டைக்கு பணம் வசூல் செய்யும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்


கருத்துகள்
கருத்துரையிடுக