புவனகிரி: 5 டன் காய்கறிகளால் அம்மன் அலங்காரம்!!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் தக்காளி, வெண்டை, உருளை, கத்தரி, சோளம், முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் சுமார் 5 டன் எடை அளவில் அம்மனுக்கு அலங்காரமாகப் பயன்படுத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக