கோவை மண்டலத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 498 மதிப்பெண்கள் மற்றும் 490 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ சைதன்யா பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா!!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி அகில இந்தியாவில் முதல் மதிப்பெண் பெற்று மாபெரும் சாதனை, கோவை மண்டலத்தில் 498 மதிப்பெண்கள் மற்றும் 490 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ சைதன்யா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது..
இந்த நிலையில், கோவை மண்டலத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையும், உயர்ந்த மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்..
இதே போல கோவை மண்டலத்தில் செயல்படும் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் 498 மதிப்பெண்கள் முதல் 494,493,487 என சிறந்த மதிப்பெண்கள் எடுத்து கவனம் ஈர்த்துள்ளனர்..
இந்நிலையில் காளப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி வளாகத்தில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா , பள்ளியின் இயக்குனர்கள் சீமா மற்றும் நாகேந்திரா அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது..
இதில் தமிழ்நாட்டின் செயல்பாட்டுத்துறை தலைவர் ஹரி பாபு ஐம்பானி , மற்றும் கோவை மண்டலத்தின் ஏ.ஜி.எம் நாகேஸ்வர ராவ் மற்றும் ஆர்.ஐ . பாலகிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இதில் காளப்பட்டி பள்ளியில் பயிலும் மாணவர் சிவா 498 மதிப்பெண்களும்,சின்னவேடம்பட்டி பள்ளி மாணவிகள் விகாஷினி,மவுமிதா மற்றும் காந்திபுரம் பள்ளி மாணவர் சித்தார்த்தா சூர்யா சுரேஷ் ஆகியோர் 494 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்..
இதே போல திருப்பூர் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் பயலும் மாணவர் விகாஷ் சரண் 494 மதிப்பெண்களும்,நீலாம்பூர் பள்ளி மாணவர் ராகுல் 493 மதிப்பெண்களும்,வடவள்ளியில் பயிலும் மாணவன் ரித்விக் கிருஷ்ணா 487, திருப்பூர் மாணவி திருப்பூர் மாணவி ஹாசினி சங்கமித்ரா 488 மதிப்பெண்களும் பெற்று அசத்தியுள்ளனர்…
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாகேஸ்வர ராவ், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி அனைத்து கிளைகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
2025-26 தேசிய அளவிலான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் அதிக தேர்ச்சி சதவீதம் மற்றும் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் கூறினார்..
இந்த சாதனைக்கு காரணமாக மாணவர்களின் கடின உழைப்பும், ஆசிரியர்களின் தொடர்ந்து அளிக்கப்பட்ட பயிற்சியும், பெற்றோரின் ஒத்துழைப்பும் அமைந்துள்ளதாக கூறினார். சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூறுகையில் ஆசிரியர்களின் தனிப்பட்ட கவனம், பள்ளி நிர்வாகத்தின் முறைப்படியான தேர்வு பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் வகுப்புகள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக