47 சென்டில் மெட்ரிக் பள்ளி? – கல்வி துறையை குலுக்கும் மோசடி!!
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூரில் இயங்கி வரும் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பள்ளி 47 சென்ட் பரப்பளவில் செயல்படுகிறது என கூறப்பட்ட நிலையில், உண்மையில் சர்வே எண் 117/2B A2-ல் மொத்தம் 47 சென்ட் நிலத்தில் மட்டுமே செயல்படுகிறது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி எப்படி கிடைத்தது?” – மக்கள் கேள்வி பள்ளிக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் சந்தேகம் எழுந்துள்ளது. “47 சென்ட் இருந்தாலே போதும்… மெட்ரிக் பள்ளி ஆரம்பிக்கலாமா?” என்று மக்கள் கடும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு எங்கே?”இந்த விவகாரத்தில் கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிப்பு இல்லையா?அல்லது திட்டமிட்ட முறையில் விதிமுறைகள் மீறப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விசாரணை கோரிக்கை பள்ளி நிர்வாகம் மற்றும் அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடலூர் செய்தியாளர் குமார்



கருத்துகள்
கருத்துரையிடுக