மே 4ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்!!
தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4ஆம் தேதி காலை 8.00 மணிக்கு 62 மையங்களில் தொடங்குகின்றன.
முதலில் தபால் வாக்குகள், 8.30 மணியளவில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் மையத்தின் ஒரு பகுதியில் தபால் வாக்குகள், மற்றொரு பகுதியில் ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படும்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
- தேர்தல் ஆணையம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக