கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4அல்லது 5 முறையாவது குடிப்பதற்கு குடிநீர் கொடுக்க வேண்டும்!ஜெ.யு.சந்திரகலா IAS !!

கால்நடைகளின் உடல் நலம் மற்றும்  பால் உற்பத்திக்கும் அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளதால் கோடை காலத்தில் கால்நடைகளின் .பராமரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 (அ) 5 முறையாவது குடிப்பதற்கு உகந்த குடிநீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர்த் தொட்டியை அமைக்க வேண்டும். 

மாடுகளை தண்ணீர் குடிக்க செய்யும் போது கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவும் போது மாடுகளின் தண்ணீர்குடிக்கும் அளவு அதிகரிக்கும். 

இது போன்ற காலகட்டங்களில் உப்பு கட்டிகளை (SALT LICK) கொட்டகைகளில் தொங்கவிடுவதினால் கால்நடைகளின் தண்ணீர்பருகும் தன்மை அதிகரிக்கும். 

நீர்தெளிப்பான் அமைப்பது, குளிர்ந்த நீரினைக் கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின்விசிறி அமைப்பது ஆகியவை மூலம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் அயர்ச்சியினைத் தவிர்க்கலாம். மேலும் மாட்டுக்கொட்டகையின் கூரைக்கு மேலேயும் நீர் தெளிப்பான் அமைக்கலாம். இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும். 

அடைக்கப்பட்ட அல்லது நெருக்கமான இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம், கொட்டகையினைச் சுற்றி விரைவாக வளரும் நிழல் தரும் மரங்களை நடுவதன் மூலம் கொட்டகைப் பகுதியினைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம். 

எருமை மாடுகள் வளர்ப்போர் குளியல் தொட்டிகளை உருவாக்கி மாடுகளை வெயில் நேரங்களில் அத்தொட்டிகளில் விடும்போது வெப்ப அயர்ச்சியிலிருந்து மாடுகளைப் பாதுகாக்கலாம். 

கோடைக்காலங்களில் மாடுகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். 

கால்நடைகளின் தீவனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபொனிக்ஸ் பசுந்தீவனம்) அசோலா உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். பருவ மழை காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும்பொழுது அவற்றினை ஊறுகாய்த் தீவனமாக மாற்றி கோடையில் உணவாக அளிக்கலாம்.

வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் செம்மறியாடுகளில் உடல் ரோமங்கள் அதிகமாக இருப்பதால் அச்செம்மறியாடுகளில் வெப்ப அயர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும். 

கோழிகளுக்கு வெப்ப காலங்களில், உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் தீவனம் எடுக்கும் அளவு) குறைகிறது. அதிக உடல் வெப்பத்தை வெளியேற்றும் முயற்சியில் கோடையில் கோழிகள் அதிக அளவு வெப்ப அயர்ச்சிக்கு ஆளாகின்றன. 

வெப்பசலன காலங்களில் கோழிகளின் உடல் எடை குறையும். குடிநீர் தொட்டியை சுற்றி அல்லது தனியே ஒரு ஓரத்தில் அமர்ந்துகொள்ளும். உமியில் உடம்பை புதைத்துக்கொள்ளும், வாயைத்திறந்து வேகமாக மூச்சு விடும், எச்சம் தண்ணீராக கழிவும் நரம்பு தளர்ச்சி ஏற்படும். இறுதியாக மூளைக்கு செல்லும் இரத்தத்தின் வெப்பம் அதிகரித்து இறப்பு விகிதம் கூடும். 

கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்கக் கூடாது, மாறாக இரவிலும், விடியற்காலைப் பொழுதிலும் தீவனம் அளிக்க வேண்டும்.

கோடையில் கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமாக இடவசதி அளிக்க வேண்டும். அதாவது ஒரு அறையில் வழக்கத்தை விட 20 விழுக்காடு குறைவான எண்ணிக்கையிலேயே கோழிகளை வளர்க்க வேண்டும்.

செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது.

வெயில் காலங்களில் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது அதிகாலை அல்லது மாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் இடமாற்றம் செய்வது சாலச் சிறந்தது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!