நத்தத்தில் புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு புகார்கள் சென்றது. தொடர்ந்து அவரது உத்தரவுப்படி நத்தம் பகுதியில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செட்டியார்குளத்தெரு மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் சின்னையா (55), ராஜாத்தி (60), அமிர்தம் (48) ஆகியோர் பெட்டிக்கடைகளில் வைத்து புகையிலை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது கடையில் இருந்து 1 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டு பின்னர் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக