தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடை அடைப்பு!!


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு முடியும் 23-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடி சீல் வைக்கத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது."ஜனநாயகக் கடமையை ஆத்தணும்னா மொதல்ல இந்த சரக்குக் கடைக்கு லீவு விட்டாதான் உருப்படும்" என அதிகாரிகள் முடிவெடுத்தாலும் எடுத்தாங்க, நம்ம ஊரு குடிமகன்கள் இப்போதே 'சரக்கு ஸ்டாக்' வைக்க முண்டியடித்துக் கொண்டு கடைகளில் தவம் கிடக்கத் தொடங்கிவிட்டார்கள். என்னதான் குவார்ட்டர் பாட்டிலை முன்கூட்டியே வாங்கிப் பதுக்கி வச்சாலும், எலக்ஷன் ஸ்குவாட் கண்ணுல சிக்குனா மொத்தமா 'காலி' பண்ணிடுவாங்க... அப்புறம் ஓட்டுப் போடுற அன்னைக்குத் தொண்டை காஞ்சுதான் கிடக்கணும்; அதனால ஸ்டாக் வைக்கிறவங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க, இல்லேன்னா இந்த மூணு நாளும் உங்களுக்குத் 'திண்டாட்டம்தான்'!


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!