ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை!!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் மூடப்பட்டன. இன்று (ஏப்.21) முதல் 3 நாட்கள் வரை மூடப்பட்டதால், நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக