மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’!பிரகாஷ்ராஜ்!!

மதுரை மாவட்டம்,‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?

மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா? மதுரை மக்கள் ஏமாந்து போயிடுவாங்களா? இன்னும் தெளிவாக போகலாம்.

நீங்க எந்த கட்சி? புதிய நீதிக்கட்சின்னு ஒண்ணு இருந்தது. அதில் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? அதுல கொள்கை என்ன? அது பாஜவோட ஒட்டிக்கிச்சு. அதை மக்களுக்கு தெரியும்னு, அதுக்காக 2 சீட்டை கொடுத்தாங்க. அதில் உங்களுக்கு 3 நாளைக்கு முன்னாடி சீட் எப்படி கொடுத்தாங்க. யானை மாலை போட்ட கதை மாதிரி, 3 நாள் முன்னாடி வந்துட்டீங்க நீங்க. ஒரு சினிமா டைரக்டர் என்கிறபோது, டைரக்டர் ஆவதற்கு 8 வருஷம் கஷ்டப்பட்டிருப்பீங்க? என்னென்ன கத்திருப்பீங்க. உங்க மனைவி குஷ்பு 10 வருஷமா அரசியல் பண்றாங்க. அவங்களுக்கு கிடைக்காத எம்எல்ஏ சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?’’ என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!