மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு!!

 



புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 25வது ஆண்டு விளையாட்டு விழா மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நிறைவுற்றது.இந்த விழா ஏப்ரல் 13, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மவுண்ட் சியோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஃப்ளோரன்ஸ் ஜெயபாரதன் தலைமை தாங்கி உரையாற்றினார். இயக்குநர் முனைவர் ஜெய்சன் கே. ஜெயபாரதன் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவியன் ராசேல் ஜெய்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.மேலும், முதல்வர் முனைவர் ப. பாலமுருகன் மற்றும் முதன்மையர் (ICT) முனைவர் ச. ராபின்சன் ஆகியோர் பாராட்டு உரையாற்றினர். இந்நிகழ்ச்சி கல்விசார் முதன்மையர் முனைவர் கு. ஸ்ரீனிவாசன் வரவேற்புரையுடன் தொடங்கியது. இயந்திரவியல் துறைத் தலைவர் சுந்தரவிக்னேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்டிடவியல் துறைத் தலைவர் குணஸ்ரீ ஆண்டு விளையாட்டு அறிக்கையை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி எஃப்.சி அணியின் ஐ-லீக் சாம்பியன் மற்றும் தொழில்முறை கால்பந்து வீரர் விக்னேஷ்வரன் பாஸ்கரன் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.விழாவில் தடகளம், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சி கணினி அறிவியல் துறைத் தலைவர் இளவரசி  நன்றியுரையுடன் நிறைவுற்றது.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!