மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா தொடக்கம்!!


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சி ஏப்ரல் 13, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெறும். மவுண்ட் சியோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஃப்ளோரன்ஸ் ஜெயபாரதன் தலைமை உரையாற்ற உள்ளார்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டெல்லி எஃப்.சி அணியின் ஐ-லீக் சாம்பியன் மற்றும் தொழில்முறை கால்பந்து வீரர் விக்னேஷ்வரன் பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்ற உள்ளார்.

மேலும், கல்லூரி இயக்குநர் முனைவர் ஜெய்சன் கே. ஜெயபாரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவியன் ராசேல் ஜெய்சன், கல்லூரி முதல்வர் முனைவர் ப. பாலமுருகன், முதன்மையர் (ICT) முனைவர் ச. ராபின்சன், மற்றும் கல்விசார் முதன்மையர் முனைவர் கு. ஸ்ரீனிவாசன் ஆகியோர் விழாவை சிறப்பிக்க உள்ளனர்.இந்த விளையாட்டு விழாவில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!