மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 25வது ஆண்டு விழா “ரேடியன்ஸ் ’26”!!
புதுக்கோட்டை மாவட்டம், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் தன்னாட்சிக் கல்லூரியில் 25வது ஆண்டு விழா “ரேடியன்ஸ் ’26” 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணிக்கு வெளிப்புற அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் துவக்க உரை ஆற்றினார். கல்லூரி தலைவர் ப்ளோரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார். பேராசிரியர் விவியன் ரேச்சல் ஜெய்சன், கல்வி ஒருங்கிணைப்பாளர், சிறப்பு உரையாற்றினார். முனைவர் ச. ராபின்சன், முதன்மையர் (ஐ சி டி) வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூரில் அமைந்துள்ள போஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொறியியல் மேலாளர் ரவீந்தர் வேல்முருகன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறமைகளை பாராட்டும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்களுக்கு சிறப்பு பாராட்டு விருதுகள் மற்றும் நீண்டகால சேவையை கௌரவிக்கும் பணியாண்டு விருதுகளும் வழங்கப்பட்டன.நேரலை இசை நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் விஜே கல்யாணி அவர்கள் தொகுத்து வழங்கினார். மேலும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ச ரி க ம ப நிகழ்ச்சியின் புகழ்பெற்ற பாடகர்கள் சாம் விஷால், பிரியா ஜெர்சன், வர்ஷா கிருஷ்ணன், ரூத்ரேஷ், தர்ஷத், ஷரத் மேத்யூ மற்றும் ராஜில் ராஜ் ஆகியோர் இணைந்து சிறப்பு நேரடி இசை நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன. “ரேடியன்ஸ் ’26” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் சிறந்த மேடையாக அமைந்தது. கல்விசார் முதன்மையர் முனைவர் கு. ஸ்ரீனிவாசன், நன்றியுரையாற்றினார். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்




கருத்துகள்
கருத்துரையிடுக