கடலில் மிதந்து வந்த சுமார் 24 கிலோ கஞ்சா முட்டையை ஜெகதா பட்டினம் விசைப்படகும் மீனவர்கள் எடுத்து கடலோர காவல் படை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு அதனால் அப்பகுதியில் பரபரப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்பலகு மீன்பிடி இறங்குதலத்தில் இருந்து சுமார் 20 நாட்டிக்கல் மைலில் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த வினோத்என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்வினோத் ,சிலம்பரசன் விஜயேந்திரன் ஆகிய மீனவர்கள் ஜெகதா பட்டினம் துறைமுகத்திலிருந்து வடக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக கடலில் மிதந்து வந்த ஒரு மூட்டையை எடுத்தனர் அதில் கஞ்சா இருந்துள்ளது அதனை விசைப்படகு மீனவர்கள் கைப்பற்றி மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்குதகவல் தெரிவித்தனர் அதன்படி அங்கு கொண்டுவரப்பட்ட 24 கிலோ கஞ்சா முட்டையை பட்டுக்கோட்டை மண்டல காவல்துறை துணை கண்காணிப்பாளர்முருகன் தலைமையில் மணமேல்குடி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு கவிதா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த பகுதியில் கஞ்சா மூடை கடலில் மிதந்து வருவதும்கடற்கரை ஓரங்களில் இதே மாதிரி மூடைகள் கிடப்பதும் வாடிக்கையாக்கி உள்ளது என்று அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக