24 மணி நேரம் போதவில்லை என்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி, இனி 1 நாள் 25 மணி நேரமாகும்!!
இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணிப்பு. ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர். ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றிய காலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக