தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 2026 சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது!!

தமிழகத்தில் கடந்த 2021 தேர்தலை விட 12 சதவீதம் அதிகமாகப் பதிவான இந்தத் தேர்தலில், கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள் அசுர வேகத்தைக் காட்டியுள்ளன.

குறிப்பாக, கரூர் மற்றும் வீரபாண்டி தொகுதிகள் தலா 93.40% வாக்குகளுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இவற்றுடன் குளித்தலை, குமாரபாளையம், பாலக்கோடு, சங்ககிரி, பெருந்துறை, கிருஷ்ணராயபுரம், மதுராந்தகம் மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் முதல் 10 இடங்களைப் பிடித்து ஜனநாயகக் கடமையில் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

 கடுமையான அரசியல் போட்டி, புதிய வாக்காளர்களின் வரவு மற்றும் மக்களின் விழிப்புணர்வு ஆகியவையே இந்த இமாலய வாக்குப்பதிவிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!