விருதுநகர்:கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!!
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தின்போது ஆலையில் சுமார் 30 பேர் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், படுகாயமடைந்த மேலும் 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக