நத்தத்தில்1500 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு!!
நத்தத்தில்1500 கிலோ புகையிலை பொருட்களை செவ்வாய்க்கிழமை போலீஸார் தீயிட்டு அழித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 வருடங்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு நத்தம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பறிமுதல் செய்யபட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை அழிக்க நத்தம் நீதிபதி ஆப்ரின்பேகம் உத்தரவிட்டார். அதன் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட 1500 கிலோ புகையிலை பொருட்களை நத்தம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமை காவலர் கணேஷ்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நத்தம் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து அழிக்கப்பட்டது.
படவிளக்கம்: நத்தம் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து அழிக்கப்பட்ட புகையிலை பொருட்களை படத்தில் காணலாம்.
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக