திருமயத்தில் அமைச்சர். ரகுபதி தலைமையில் நடைபெற்ற டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்தநாள் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலைநாட்ட வலிமையான ஆயுதமாக இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை யொட்டி திருமயம் தொகுதியின் திமுக வேட்பாளர். எஸ்.ரகுபதி தலைமையில் கொப்பனாபட்டி அம்பேத்கார் நகரில் அண்ணலின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக