கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற அன்னல் அம்பேத்கரின் 136வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!

கோவை மாவட்டம்,சட்ட மாமேமை அண்ணல் அம்பேத்கரின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று, அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட பட்டது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளருமான வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அம்பேத்கர் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்த பட்டது. மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்க பட்டது. மேலும் அம்பேத்கரின் நினைவுகள், அவர் செய்த தியாகங்கள், சட்ட வியூகங்கள், குறித்து விளக்கவுரை எடுத்து கூறபட்டது. 

அப்பொழுது வழக்கறிஞர் புஸ்பாணந்தம் கூறியதாவது.. 

பீம் ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் அம்பேத்கர் ஜெயந்தியானது.. இந்திய அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான பி.ஆர். அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் ஏப்ரல் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பிறந்த அம்பேத்கரின் பிறந்தநாளைக் குறிக்கிறது என்றார். அவரது பிறந்தநாள் இந்தியாவில் சமத்துவ தினம் என்றும் குறிப்பிடப்படுகிறதாகவும், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் எனவும் பல மொழிகளிலும், சட்டத்திலும் புலமை பெற்றவர் இவர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததாக கூறினார். மேலும், 

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுத் தலைவராக இருந்து, உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்பை உருவாக்கியதாகவும் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கி உருவாவதற்கு அம்பேத்கரின் 'ரூபாயின் சிக்கல்' தி பிராப்ளம் ஆப் தி ரூபி என்ற ஆய்வுக் கட்டுரை முக்கிய அடிப்படையாக இருந்ததாகவும் கூறினார். இந்து வாரிசுரிமைச் சட்டம் மூலம் பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் சம உரிமைகளுக்காகப் போராடியவர் அன்னல் அம்பேத்கர், இவரது பிறந்தநாளில் அவரை  கொண்டாடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என்றார். 

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தா செல்வராஜ், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன் ராஜா, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் மகேஷ்வரன், வேல் முருகன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், காங்கிரஸ் பால் ராஜ், பீட்டர், அரசு பணி நிறைவு தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!